தென் கொரிய சபாநாயகர் நாட்டிற்கு வருகை

தென் கொரிய சபாநாயகர் நாட்டிற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2022 | 10:08 am

Colombo (News 1st) தென் கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சூக் (Park Byeong-seug) உள்ளிட்ட 18 பேர் அடங்கிய தூதுக்குழு 04 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (19) நாட்டை வந்தடைந்துள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரால் தென் கொரிய சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அரச அதிகாரிகளை தென் கொரிய சபாநாயகர் சந்திக்கவுள்ளார்.

மேலும், இலங்கை பாராளுமன்றத்திற்கும் தென் கொரிய சபாநாயகர் விஜயம் செய்யவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்