by Staff Writer 20-01-2022 | 9:51 AM
Colombo (News 1st) உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ள முடியும் என தாம் எண்ணுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
எனினும் முழுமையான போரை விரும்பவில்லை என பைடன் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு அச்சுறுத்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் மேற்குலகை பரீட்சிக்கும் நடவடிக்கைகக்கு ரஷ்ய தலைவர் உரிய விலை கொடுக்க வேண்டும் எனவும் பைடன் கூறியுள்ளார்.
உக்ரைன் எல்லைகளுக்கு அருகே ரஷ்யா அதன் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினரை நிலைநிறுத்தியுள்ளது.
இதனையடுத்து, உக்ரைனின் தற்பாதுகாப்பிற்காக குறுகிய தூர ஏவுகணைகளை வழங்குவதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.