இன்று (20) மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை

இன்று (20) மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை

இன்று (20) மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2022 | 12:31 pm

Colombo (News 1st) களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு இன்று (20) அதிகாலை 1,800 மெட்ரிக் தொன் டீசல் கிடைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு மின்பிறப்பாக்கி செயற்பட ஆரம்பித்துள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக பொதுமுகாமையாளருமான அன்றூ நவமணி குறிப்பிட்டார்.

அதனூடாக தேசிய கட்டமைப்பிற்கு 115 மெகாவாட் மின்சாரம் இணைக்கப்படுவதாக அவர் கூறினார்.

மற்றைய மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளையும் இன்று (20) பகல் மீள ஆரம்பிக்கக்கூடும் என அன்றூ நவமணி குறிப்பிட்டார்.

அதற்கமைய, இன்றிரவு (20) மின்வெட்டை அமுல்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்