Colombo (News 1st) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியூடான போக்குவரத்து தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கின்ற எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.