யாழ். போதனா வைத்தியசாலையில் திரவ ஒக்சிஜன் தாங்கி 

by Staff Writer 19-01-2022 | 7:41 AM
Colombo (News 1st) யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி ​நேற்று (18) திறந்துவைக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்களான வைத்தியர் சிறீபவானந்தராஜா மற்றும் வைத்தியர் யமுனாநந்தா ஆகியோரது தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த திரவ ஒக்சிஜன் தாங்கி வட மாகாணத்தில் முதற்தடவையாக மத்திய சுகாதார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.