வெல்லவாயவில் கேரள கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு

வெல்லவாயவில் கேரள கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு

வெல்லவாயவில் கேரள கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2022 | 1:52 pm

Colombo (News 1st) வெல்லவாய – அம்பேகமுவ பகுதியில் 258 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கேரள கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (18) மாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதலின் போது கேரள கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை, தனமல்வில மற்றும் அம்பேகமுவ பகுதிகளை சேர்ந்த 25, 30, 44 வயதான மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்