வென்னப்புவ தேவாலய கல்லறை குறித்த ஆய்வுக்கு விசேட குழு

வென்னப்புவ தேவாலய கல்லறை குறித்த ஆய்வுக்கு விசேட குழு

வென்னப்புவ தேவாலய கல்லறை குறித்த ஆய்வுக்கு விசேட குழு

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2022 | 10:36 am

Colombo (News 1st) வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையை ஆய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அந்த இடத்திலேயே வைத்திருப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

தேவாலய அருட்தந்தையின் விருப்பிற்கு இணங்க குறித்த கல்லறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ இலக்கியத்துக்கு பெரும்பங்காற்றிய அருட்தந்தை ஜாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளாரின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்ட இடமா என்பது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, கிடைக்கப்பெறும் சான்றுகளின் அடிப்படையில் அது தொடர்பிலான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

300 வருட வரலாற்றை கொண்ட வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயமானது பலருடைய நன்மதிப்பினையும் பெற்ற தேவாலயமாக கருதப்படுகின்றது.

தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது குறித்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்