ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத்

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத்

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத்

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2022 | 10:58 am

Colombo (News 1st) ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று (19) முற்பகல் ஆரம்பித்தார்.

மாத்தறை ராஹுல மற்றும் காலி ரிச்மன்ட் கல்லூரிகளின் பழைய மாணவரான காமினி செனரத், களனி பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் விசேட சித்தி பெற்ற பட்டதாரியுமாவார்.

1984 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த அவர், பதவிய ஸ்ரீபுர பகுதிக்கான உதவி பிரதேச செயலாளராக முதல் நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்