சந்திரிக்காவிடம் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு

by Staff Writer 19-01-2022 | 8:45 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (19) அழைக்கப்பட்டிருந்தார். நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் செயற்படுத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்வதற்காக தான் அழைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். குறித்த பொலிஸ் பிரிவில் அவர் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.