ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா

ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா

ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா

எழுத்தாளர் Bella Dalima

19 Jan, 2022 | 6:16 pm

Colombo (News 1st) இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

2022 டென்னிஸ் சீசன் முடிவில் அவர் டென்னிஸில் இருந்து விடைபெறவுள்ளதாகக் கூறியுள்ளார்.

டென்னிஸ் விளையாட்டின் முன்னணி வீராங்கனையாக வலம் வந்த சானியா மிர்சா, தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றுடன் வெளியேறினார்.

முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு தனது ஓய்வுத் திட்டம் பற்றி அறிவித்தார்.

சானியா மிர்சா இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அவர் மகளிர் இரட்டையர் தர வரிசையின் உச்சநிலையை எட்டியுள்ளார். ஒற்றையர் தர வரிசையில் முதல் 30 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்