இந்திய கடற்படை கப்பலில் வெடி விபத்து: மூவர் பலி

இந்திய கடற்படை கப்பலில் வெடி விபத்து: மூவர் பலி

இந்திய கடற்படை கப்பலில் வெடி விபத்து: மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2022 | 10:08 am

Colombo (News 1st) மும்பையில் கடற்படைத் தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 03 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 11 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மும்பை கடற்படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலிலேயே வெடி விபத்து சம்பவித்துள்ளதாக இந்திய பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது .

மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கப்பலின் உட்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 03 வீரர்கள் உயிரழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

INS Ranvir என்ற இந்தக் கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்