வென்னப்புவ தேவாலயமொன்றில் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு

by Staff Writer 18-01-2022 | 7:24 AM
Colombo (News 1st) வென்னப்புவ பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட கட்டட நிர்மாணப் பணிகளின் போது பழமையான கல்லறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ - போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணத்திற்கான அகழ்வின் போதே பழமையான கல்லறையின் சிதைவுகள் வௌிப்பட்டுள்ளன. தேவாலயத்திற்கு அருகே நிர்மாணப் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்ட போது இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.