வென்னப்புவ தேவாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை யாருடையது?

வென்னப்புவ தேவாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை யாருடையது?

வென்னப்புவ தேவாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை யாருடையது?

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2022 | 2:07 pm

Colombo (News 1st) வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணத்திற்கான அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கல்லறை தொடர்பிலான தொல்பொருள் அகழ்வாராய்ச்சி பணிகள் இன்று (18) பிற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நேற்றைய தினம் (17) பரலோக அன்னை தேவாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டட நிர்மாணப் பணிகளின் போது பழமையான கல்லறையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையானது எந்த காலத்திற்குரியது மற்றும் யாருடையது என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்