பசுமை விவசாய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை – ஜனாதிபதி

பசுமை விவசாய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2022 | 12:06 pm

Colombo (News 1st) பசுமை விவசாயம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை வௌியிட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த கொள்கையை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாகன இறக்குமதிக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படுவதுடன், மின்சாரத்தில் இயங்கும் கார்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரில் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்த போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்