பீட்ரூட் செய்கையாளர்களை பாதிக்கும் இறக்குமதி

இறக்குமதியால் பாதிக்கப்படும் பீட்ருட் செய்கையாளர்கள்

by Staff Writer 18-01-2022 | 7:24 PM
Colombo (News 1st) பாகிஸ்தானிலிருந்து தொடர்ச்சியாக நாட்டிற்கு பீட்ருட் இறக்குமதி செய்யப்பட்டால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென பீட்ருட் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் சுமார் 20 ஹெக்டேர் பீட்ருட் செய்கை முன்னெடுக்கப்படுகின்றது. வலிகாமம் வடக்கில் இரண்டு வாரங்களில் பீட்ருட் அறுவடை செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், வௌிநாடுகளில் இருந்து பீட்ரூட் இறக்குமதி செய்யப்படுமானால், தமது உற்பத்திக்கான சந்தை வாய்ப்புகள் இல்லாமல் போகுமென செய்கையாளர்கள் கவலை தெரிவித்தனர். பலாலி - வசவிளானிலும் 2 ஏக்கரில் பீட்ரூட் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உரமின்றி பாரிய இன்னல்களுக்கு மத்தியில் மேற்கொண்ட செய்கையினை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படுமாவென செய்கையாளர் சந்தேகிக்கின்றனர்.