அக்கரபத்தனையில் 3 கோவில்களில் திருட்டு

அக்கரபத்தனையில் 3 கோவில்களில் திருட்டு

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2022 | 7:50 pm

Colombo (News 1st) தலவாக்கலை – அக்கரபத்தனையிலுள்ள மூன்று கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை – சின்னத்தோட்டம் , பச்சபங்களா, உருலேக்கர் பகுதிகளிலுள்ள ​கோவில்களிலேயே இந்த திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மூன்று கோவில்களிலும் அண்மையில் கும்பாபிஷேகம் இடம்பெறவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

திருட்டு சம்பவம் தொடர்பில் மூன்று கோவில்களின் நிர்வாகத்தினரும் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இதனிடையே, கடந்த முதலாம் திகதி அக்கரபத்தனை நகரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலுள்ள 14 சிலைகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற செயற்பாடுகளின் பின்னர் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அக்கரபத்தனை பொலிஸார் நியூஸ்ஃபெஸ்டுக்கு தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்