by Staff Writer 17-01-2022 | 8:11 PM
Colombo (News 1st) ஹட்டன் - சிங்கமலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் விறகு எடுப்பதற்காக சென்றவர்களால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.
நீராடுவதற்காகவும் மீன் பிடிப்பதற்காகவும் குறித்த நீர்த்தேக்கத்தை மக்கள் பயன்படுத்துவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.