பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்ட இளைஞர் லொறியுடன் மோதி உயிரிழப்பு

பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்ட இளைஞர் லொறியுடன் மோதி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2022 | 3:40 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை, பண்ணைப் பகுதியில் நேற்று (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 22 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ஊர்காவற்றுறையிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பஸ்ஸொன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்