மத்திய அதிவேக வீதியில் பொது போக்குவரத்து சேவைகள்

மத்திய அதிவேக வீதியில் 20 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவை

by Staff Writer 16-01-2022 | 4:33 PM
Colombo (News 1st) எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மத்திய அதிவேக வீதியில் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கொழும்பு - கண்டி மற்றும் கொழும்பு - குருணாகல் பகுதிகளுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார். அதிவேக வீதியூடான பஸ் கட்டணங்கள் எதிர்வரும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருணாகல் மற்றும் யக்கபிட்டி வரை பயணிப்பதற்கான நுழைவு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இலகுரக வாகனங்களுக்கான நுழைவு கட்டணமாக 250 ரூபாவும் பஸ் உள்ளிட்ட 6 டயர்களுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு மீரிகமயிலிருந்து குருணாகல் மற்றும் யக்கபிட்டிக்கு பகுதிக்கான நுழைவுக்கட்டணமாக 350 ரூபா அறவிடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மத்திய அதிவேக வீதியின் எத்துகல்புற நுழைவாயில், மக்கள் பாவனைக்காக நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.