English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Jan, 2022 | 4:56 pm
Colombo (News 1st) ஹெய்ட்டி ஜனாதிபதி ஜொவெனல் மொய்ஸின் (Jovenel Moïse) கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அந்நாட்டின் முன்னாள் செனட்டர் ஒருவர் ஜமைக்க நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
John Joel Joseph என்ற ஹெய்ட்டியின் முன்னாள் செனட்டர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஜமைக்கா காவல் படைகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹெய்ட்டி தலைநகர் Port-au-Prince இலுள்ள வாசஸ்தலத்தைச் சூழ்ந்த ஆயுததாரிகள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி ஜொவெனல் மொய்ஸ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைக்கான ஆயுதங்களை விநியோகித்தமை, கூட்டங்களைத் திட்டமிட்டமை போன்றவற்றை Joseph மேற்கொண்டதாக ஹெய்ட்டியின் தேசிய பொலிஸ் தலைவர் Leon Charles குறித்த சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்திலேயே தெரிவித்திருந்தார்.
இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI மேற்கொண்டு வருகின்ற நிலையில், அதனுடைய கோரிக்கைக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றதா என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க ஜமைக்கா காவல் படைகளின் பேச்சாளர் மறுத்துவிட்டார்.
கொலை செய்யப்பட்ட ஹெய்ட்டி ஜனாதிபதி ஜொவெனல் மொய்ஸ்
15 Aug, 2021 | 11:14 AM
10 Jul, 2021 | 04:02 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS