நாகவத்தை கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் நல்லடக்கம்

நாகவத்தை கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் நல்லடக்கம்

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2022 | 5:28 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – கிரான், நாகவத்தை கடலில் நீராடச் சென்று உயிரிழந்த மாணவர்கள் இருவரின் இறுதிக் கிரியைகள் இன்று (16) நடைபெற்றன.

மாணவர்களின் பூதவுடல்கள் மட்டக்களப்பு – கிரான் இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

மாணவர்களின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிரான் தேசிய பாடசாலை முன்பாக வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் – நாகவத்தை கடற்பகுதியில் நேற்று முன்தினம் (14), ஏழு பாடசாலை மாணவர்கள் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது மூவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டார்.

நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரண்டு மாணவர்களின் சடலங்களும் நேற்று (15) மீட்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்