மத்திய அதிவேக வீதியின் அத்துகல்புர நுழைவாயில் திறந்து வைப்பு 

by Staff Writer 15-01-2022 | 5:12 PM
Colombo (News 1st) மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் அத்துகல்புர நுழைவாயில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இன்று மாலை 4.30 அளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருநாகல் வரையான பகுதி 41 கிலோமீட்டர் தூரம் கொண்டதாகும். மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் பணம் செலுத்தும் கருமபீடங்களுடன் ஐந்து பரிமாற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றாடல், சமூக ரீதியான பாதிப்புகளை குறைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். நான்கு ஒழுங்கைகளைக் கொண்டதாக குறித்த அதிவேக வீதி அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதிக்கு உள்நாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்த திட்டத்திற்காக 149 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. இந்த அதிவேக வீதி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் நகர்ப்புறங்களைத் தவிர்த்து செல்லும் வகையில் 4 வழிப் பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மீரிகம, நாக்கலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் பணம் செலுத்தும் கருமபீடங்களுடன் ஐந்து இடமாறல்களும் அமைக்கப்பட்டுள்ளன.