டோங்காவை தாக்கிய சுனாமி அலைகள்

டோங்காவில் சுனாமி; ஏராளமான வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன

by Bella Dalima 15-01-2022 | 6:20 PM
Colombo (News 1st) பசிபிக் நாடான டோங்காவை (Tonga) சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. கடலுக்கடியிலுள்ள எரிமலை வெடித்ததையடுத்து சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. தேவாலயம் ஒன்றும் ஏராளமான வீடுகளும் சுனாமி அலைகளால் அடித்துச்செல்லப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. Hunga Tonga-Hunga Haʻapai எனும் எரிமலை வெடித்ததையடுத்து, பசிபிக் சமுத்திரத்தின் தென் பிராந்தியத்தில் பாரிய அதிர்வு பதிவாகியிருந்தது. இந்த எரிமலை டோங்காவின் தலைநகரிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எரிமலை வெடிப்பையடுத்து, அந்த நாடு முழுவதற்கும் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் உயரமான பகுதிகளை நோக்கி முண்டியடித்துச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எரிமலையிருந்து வௌியாகிய புகை வானை நோக்கி 20 கிலோமீட்டர் உயரம் வரை சென்றதாக டோங்கா புவிச்சரிதவியல் சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.