மட்டக்களப்பில் குளிக்கச்சென்று காணாமற்போன 2 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பில் குளிக்கச்சென்று காணாமற்போன 2 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2022 | 9:03 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – கிரான், நாகவத்தை கடலில் குளிக்கச்சென்று காணாமற்போன மாணவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகவத்தை கடற்பகுதியில் நேற்று (14) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் 7 பேர் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, மூவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன், ஒருவர் காப்பாற்றப்பட்டிருந்தார்.

நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த ஏனைய இருவரும் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.

இன்று பிற்பகல் வேளையில் ஒரு மாணவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், மற்றைய மாணவரின் சடலம் இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்