by Staff Writer 15-01-2022 | 3:51 PM
Colombo (News 1st) இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் 3000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நேற்றைய தினமும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து எரிபொருள் கிடைத்ததால், நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இன்றும் குறித்த அளவான எரிபொருள் கிடைக்குமாயின், வேறு அனர்த்தங்கள் ஏற்படாத பட்சத்தில் மின் விநியோகத்தை தொடர்ச்சியாக வழங்க முடியும் எனவும் மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அனர்த்தங்கள் ஏற்படாத பட்சத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.