இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 1000 வீடுகள் கையளிப்பு

இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 1000 வீடுகள் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2022 | 8:05 pm

Colombo (News 1st) இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 1000 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நுவரெலியா – கொட்டகலையில் இன்று (15) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ , சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, 1000 வீடுகளுக்கான திறப்புகள் அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்