by Staff Writer 14-01-2022 | 7:30 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் புதைந்துள்ள உழவு இயந்திரங்களை தோண்டியெடுக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
யுத்தத்தின்போது கைவிடப்பட்டு கடற்கரையில் புதையுண்டதாகக் கருதப்படும் 02 உழவு இயந்திரங்களின் பாகங்கள் சில, கடந்த 08 ஆம் திகதி கரையொதுங்கியிருந்தன.
இதனையடுத்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய, இரண்டு கனரக இயந்திரங்களை பயன்படுத்தி குறித்த உழவு இயந்திரங்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கைகள் நேற்று (13) முன்னெடுக்கப்பட்டன.
உழவு இயந்திரங்களை எடுப்பதற்காக குழிகளைத் தோண்டிய போது தொடர்ச்சியாக நீர் நிரம்பியதால், இந்த முயற்சியினை கைவிட தீர்மானித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தோண்டப்பட்ட குழிகள் மீளவும் மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.