வாழைச்சேனையில் கடலில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை

வாழைச்சேனையில் கடலில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை

வாழைச்சேனையில் கடலில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2022 | 5:11 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் – நாகவத்தை கடற்பகுதியில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.

நீரில் மூழ்கிய மூவர் காணாமற்போன நிலையில், ஒரு சிறுவன் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நண்பர்கள் 7 பேர் இன்று மதியம் 1.30 அளவில் நாகவத்தை கடற்பகுதியில் குளிக்கச்சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காணாமற்போன சிறுவர்கள் இருவரையும் பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தேடி வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்