யாழ். புத்தூரில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து ஒருவர் பலி

யாழ். புத்தூரில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து ஒருவர் பலி

யாழ். புத்தூரில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2022 | 5:38 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மரக்கறி தோட்டத்தில் உழவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி குடைசாய்ந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தூர் – கலைமதி கிராமத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்