”சந்திரிக்கா” நூல் வௌியீடு

”சந்திரிக்கா” நூல் வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2022 | 8:45 pm

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பற்றி எழுதப்பட்ட நூலொன்று இன்று (14) வௌியிடப்பட்டது.

தரிந்து தொட்டவத்தவினால் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல், சந்திரிக்கா என பெயரிடப்பட்டுள்ளது.

நூல் வௌியீட்டு விழாவில் அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையின் முக்கியமான பல தருணங்களை உள்ளடக்கி இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.

நான்கு வருட காலம் முன்னெடுக்கப்பட்ட தேடலின் பயனாகவே இன்று இந்த நூல் சாத்தியமாகியுள்ளது.

வௌியீட்டு வைபவத்தில் , முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க சிறப்புரை ஆற்றினார்.

இதன்போது, சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டதாக ஷிராணி பண்டாரநாயக்க குறிப்பிட்டார்.

2013 ஜனவரியில் நீதித்துறை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் சந்திரிக்கா மீதான மதிப்பும் மரியாதையும் மென்மேலும் உயர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்