by Staff Writer 14-01-2022 | 3:14 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (14) ஆயிரம் நாட்கள் பூர்த்தியாகின்றன.
இதனை முன்னிட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று முற்பகல் ராகம பெசிலிக்கா பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த ஆராதனைகளில் நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களையும் சேர்ந்த ஆயர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஏப்ரல் 21 தாக்குதல் அடிப்படைவாதிகளின் செயற்பாடு என ஏற்கனவே அறிந்திருந்தும் அதற்கு இடமளித்த சில தலைவர்கள், தாக்குதலை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதன்போது தெரிவித்தார்.