by Staff Writer 13-01-2022 | 8:02 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வு இன்று யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது .
யாழ்ப்பாணம் - முற்றவெளியில் இந்த விடுதலைப் பொங்கல் இன்று காலை இடம்பெற்றது.
பல வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளாக சிறைகளில் இருந்து வருகின்ற அரசியல் கைதிகளை பொங்கல் தினத்தில் அல்லது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
விடுதலை பெற்ற அரசியல் கைதியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவருமான கோமகன் தலைமையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
சிறை போன்ற அமைப்பொன்றுக்குள் பொங்கல் பொங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.