நீண்டகால இறையாண்மை கடன் தரப்படுத்தலில் பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை

நீண்டகால இறையாண்மை கடன் தரப்படுத்தலில் பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை

நீண்டகால இறையாண்மை கடன் தரப்படுத்தலில் பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2022 | 4:46 pm

Colombo (News 1st) நீண்டகால இறையாண்மை கடன் தரப்படுத்தலில் இலங்கை CCC+ தரத்தில் இருந்து CCC தரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

STANDARD & POOR’S சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் (S&P Global Ratings)வௌியிடப்பட்டுள்ள புதிய தரப்படுத்தலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வௌித்தரப்பு கடன்கள் தொடர்பிலான விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடன் தரப்படுத்தலில் இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளதால், இலங்கையின் எதிர்கால வௌிநாட்டுக் கடன் கொடுப்பனவுகள் மற்றும் கையிருப்பு என்பன பாதிக்கப்படும் என STANDARD & POOR’S சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கையினூடாக பதிலளித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி காலாவதியாகவுள்ள சர்வதேச இறையாண்மை முறிகள் கொடுப்பனவை முழுமைப்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த பின்புலத்தில், தமது தரப்படுத்தலில் இலங்கையை பின்தள்ளுவதற்கு STANDARD & POOR’S நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை நியாயமற்றதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்