மின் துண்டிப்பு ஒரு சதித்திட்டமா? 

by Staff Writer 12-01-2022 | 9:32 PM
Colombo (News 1st) இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு இன்று மதியம் அறிவித்தது. நேற்றைய தினமும் மின்சாரம் துணடிக்கப்படாது என அமைச்சு அறிவித்தாலும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பல பிரதேசங்களுக்கு மின் துண்டிப்பு ஏற்பட்டது. அவசர மின் துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து சிவில் செயற்பாட்டாளர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தனர். இதே​வேளை, இந்த சம்பவங்களின் பின்புலத்தில் சதித்திட்டம் இருப்பதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். இது தொடர்பில் தொழில்நுட்ப பொறியியலாளர் அதிகார சபையின் தலைவர் A.G.U.நிஷாந்த பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
கடந்த 2021 டிசம்பர் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது ஒரு சதித்திட்டமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது, அதனை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மின் விநியோம் தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக அந்த அறிக்கையில் தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல்மிகு அரசியல்வாதிகள் மற்றும் மிக மோசமான வியாபாரிகளால் வகுக்கப்பட்ட ஒரு திட்டமே இங்கு முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே, மின்சார மாபியாவை அறிந்துகொண்டு அதற்கு தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பு.