ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்த வட கொரியா

ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்த வட கொரியா

ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்த வட கொரியா

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2022 | 10:47 am

Colombo (News 1st) மற்றுமொரு ஹைப்பர்சோனிக் (Hypersonic) ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார்.

1,000 கிலோமீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடிய வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவினால் Hypersonic ஏவுகணை பரீட்சிக்கப்பட்டுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 5 ஆம் திகதியும் வட கொரியாவினால் Hypersonic ஏவுகணையொன்று  பரீட்சிக்கப்பட்டிருந்தது.

பியோங்யெங்கின் பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கிம் ஜோங் உன் தமது புது வருட உரையில் சூளுரைத்திருந்த நிலையில், Hypersonic ஏவுகணைகள் பரிசோதிக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்