கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் H.D.கருணாரத்ன நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் H.D.கருணாரத்ன நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் H.D.கருணாரத்ன நியமனம்

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2022 | 5:16 pm

Colombo (News 1st) கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் H.D.கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டர் பதிவினூடாக அறிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதி பீடத்தின் பீடாதிபதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை செயற்பட்ட பேராசிரியர் H.D.கருணாரத்ன பொருளியல் கற்கை பிரிவின் முன்னாள் தலைவருமாவார்.

H.D. கருணாரத்ன உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், பிரபல்யமான பொருளியல் நிபுணரான அவர் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்