அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருகோணமலை விஜயம்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருகோணமலை விஜயம்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருகோணமலை விஜயம்

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2022 | 10:31 pm

Colombo (News 1st) இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் David Holly திருகோணமலைக்கு இன்று (12) விஜயம் செய்தார்.

மூதூர் – சேனையூர் புவனேஸ்வரி வித்தியாலயத்தில் COVID தடுப்பு மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் நிதியுதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பாடசாலை நிர்வாகத்தினால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்