மெக்ஸிக்கோவிற்கு பரவிய புளோரோனா வைரஸ்

மெக்ஸிக்கோவிற்கு பரவிய புளோரோனா வைரஸ்; மூவருக்கு தொற்று

by Bella Dalima 11-01-2022 | 4:05 PM
Colombo (News 1st) உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ், டெல்டா, காமா, ஒமிக்ரோன் என பல வடிவங்களில் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸூடன் இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலை உண்டு பண்ணும் வைரஸூம் இணைந்து, புளோரோனா (Florona - Flu + Coronavirus) என்ற புதிய வைரஸ் அண்மையில் உருவானது. உலகில் முதன்முறையாக இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த புளோரோனா வைரஸ் தற்போது லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவினுள் நுழைந்துவிட்டது. மெக்ஸிக்கோவின் நயாரிட் மற்றும் ஜலிஸ்கோ மாகாணங்களில் 28 வயது இளம்பெண் உட்பட 3 பேருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.