நானாட்டான் சட்டவிரோத மணல் அகழ்வு வழக்கு ஒத்திவைப்பு

நானாட்டான் சட்டவிரோத மணல் அகழ்வு வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2022 | 9:09 am

Colombo (News 1st) மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (10)  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நானாட்டான் பிரதேச சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு மன்னார் நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

திணைக்கள அதிகாரிகள் மன்றில் ஆஜராகாத நிலையில் வழக்கு அடுத்த மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்