by Staff Writer 11-01-2022 | 12:52 PM
Colombo (News 1st) தேவை ஏற்பட்டால் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
முன்னாயத்த நடவடிக்கையாக இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.