கொலொன்னாவ கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

கொலொன்னாவ கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 10-01-2022 | 5:07 PM
Colombo (News 1st) கொலன்னாவ பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைத்த தகவலுக்கமைய குறித்த மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபரொருவர் என உயிரிழந்தவரின் உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, இன்று (10) பகல் வேளையில் பம்பலப்பிட்டி மற்றும் வௌ்ளவத்தை கடற்கரைகளில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.