by Staff Writer 10-01-2022 | 3:16 PM
Colombo (News 1st) நாளாந்தம் சுமார் 15,000 எரிவாயு சிலிண்டர்கள், சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக Laugfs எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 10,000 தொன் எரிவாயு அடங்கிய கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ளதாக Laugfs எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H.வேகப்பிட்டிய தெரிவித்தார்.
இதனிடையே, நாளாந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக கிட்டத்தட்ட 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.