ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 வருட கால சிறைத்தண்டனை

ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 வருட கால சிறைத்தண்டனை

by Chandrasekaram Chandravadani 10-01-2022 | 3:35 PM
Colombo (News 1st) மியன்மாரின் பதவி கவிழ்க்கப்பட்ட நிர்வாகத் தலைவர் ஆங் சாங் சூகிக்கு  மேலும் 04 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் வோக்கிடோக்கியை கொள்வனவு செய்தமை மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ஆங் சாங் சூகிக்கு ஏற்கனவே 04 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனைத்தவிர ஊழல் தொடர்பான மேலும் பல குற்றச்சாட்டுக்கள் ஆங் சாங் சூகி மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபணமானால் அவருக்கு மேலும் 5 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.