மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி பணிப்புரை

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி பணிப்புரை

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2022 | 3:56 pm

Colombo (News 1st) பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

மின்வெட்டு விவகாரம் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைகளின் தலைவர்களுடன் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

நிலக்கரி மற்றும் புதைபடிவ எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்