முல்லைத்தீவில் கரையொதுங்கிய மிதக்கும் கலன் யாருடையது?

முல்லைத்தீவில் கரையொதுங்கிய மிதக்கும் கலன் யாருடையது?

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2022 | 7:22 pm

Colombo (News 1st) மிதக்கும் கலன் ஒன்று முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

நாயாறு கடற்கரை பகுதியில் சுமார் 50 மீட்டர் நீளமுடைய மிதக்கும் கலன் நேற்றிரவு கரையொதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் பிரதேச மக்களால் உரிய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு கடற்பிராந்தியத்தில் குறித்த கலன் மிதந்துகொண்டிருந்ததாகவும் அதனை தொடர்ந்தும் கண்காணித்து வந்ததாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

குறித்த மிதக்கும் கலன், இலங்கைக்கு சொந்தமானதல்ல எனவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்