பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பசில் ராஜபக்ஸ மாவட்ட செயலாளர்களுக்கு தௌிவூட்டல்

பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பசில் ராஜபக்ஸ மாவட்ட செயலாளர்களுக்கு தௌிவூட்டல்

பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பசில் ராஜபக்ஸ மாவட்ட செயலாளர்களுக்கு தௌிவூட்டல்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2022 | 3:51 pm

Colombo (News 1st) வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தௌிவுபடுத்தியுள்ளார்.

Zoom தொழில்நுட்பத்தினூடாக மாவட்ட செயலாளர்களுக்கு தௌிவூட்டல்கள் இடம்பெறுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் M.H.M.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் பிராந்திய அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 85,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் முதற்கட்ட நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஒவ்வொரு பிரதேச அபிவிருத்தித் திட்டங்களையும் அரச உத்தியோகத்தர் மேற்பார்வையிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து நிதியும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக மாத்திரம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்