English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
08 Jan, 2022 | 5:54 pm
Colombo (News 1st) பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி (Murree) மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
இந்நிலையில், முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது 21 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக கார்களுக்குள் பயணிகள் சிக்கிக்கொண்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் தடையால் அப்பகுதிக்கு செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் – முர்ரி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. முர்ரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
15 Jun, 2022 | 09:44 AM
19 Apr, 2022 | 07:05 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS