தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் ஏப்ரலுக்கு முன்னர் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும்: மஹிந்தானந்த அளுத்கமகே

தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் ஏப்ரலுக்கு முன்னர் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும்: மஹிந்தானந்த அளுத்கமகே

எழுத்தாளர் Bella Dalima

08 Jan, 2022 | 8:39 pm

Colombo (News 1st) இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு காணி வழங்கும் நிகழ்வில் நேற்று (07) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது, ஒவ்வொருவருக்கும் தலா ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கி வைக்கப்பட்டது.

தோட்ட மக்களுக்கு இவ்வாறு காணி வழங்கும் செயற்பாடுகள் கடந்த 200 வருடங்களில் நடந்ததில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்