ஜனாதிபதி ஜயஸ்ரீ மகாபோதியில் வழிபாடு

ஜனாதிபதி ஜயஸ்ரீ மகாபோதியில் வழிபாடு

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2022 | 7:32 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (08) காலை வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

புண்ணிய ஸ்தலத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கலாநிதி பல்லேகல சிறிநிவாச நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

ஜயஶ்ரீ மகாபோதியை வழிபடுவதற்காக வருகை தரும் யாத்திரிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வாகனத் தரிப்பிடத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பாக ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

ஜயஶ்ரீ மகாபோதிக்கு அருகில் மஹா சங்கத்தினரால் பிரித் ஓதப்பட்டு ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்