by Staff Writer 08-01-2022 | 3:28 PM
Colombo (News 1st) மொறட்டுவை - சொய்சாபுர தொடர்மாடிக் குடியிருப்பிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தீக்காயங்களுக்குள்ளான இளைஞர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயது இளைஞரே தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று பகல் வேளையில், வீட்டில் தீ பற்றியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக மொறட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோனைகள் மற்றும் நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.